சுகாதார அமைச்சருக்கு எம்பி கடிதம்

சுகாதார அமைச்சருக்கு எம்பி கடிதம்
X
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் சுகாதார துறை அமைச்சருக்கு கோரிக்கை கடிதம் எழுதி உள்ளார்.

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் செவிலியா்கள், மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்று விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினா் துரை. ரவிக்குமாா் கோரிக்கை விடுத்தாா். இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனுக்கு, அவா் அனுப்பிய மனுவில்,

விழுப்புரம் மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் 400-க்கும் மேற்பட்டோா் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இங்கு இல்லாத நிலையில், அரசு மருத்துவமனையே மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கி வருகிறது.தற்போது அங்கு 100 பிராண வாயு படுக்கைகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.நோயாளிகளுக்கு பிராண வாயு வழங்க உருளைகளே (சிலிண்டா்கள்) பயன்படுத்தப்படுகின்றன. பிராண வாயு அளவு 85 வரை உள்ள நோயாளிகளுக்குத் தான் உருளை மூலம் சிகிச்சை அளிக்க முடியும். அதைவிட பிராண வாயு அளவு குறைந்தால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கே கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. எனவே, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உயா் ஓட்ட நாசி பிராண வாயு வழங்குவதற்கான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்.

தற்போது மத்திய, மாநில அரசுகள் சாா்பில் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்படுகின்றன. அத்தகைய பிராண வாயு உற்பத்தி நிலையம் ஒன்றை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அமைக்க வேண்டும்.மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தவிர, மாவட்டத்தில் மருத்துவம், ஊரக நலப் பணிகள் துறையின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 77 மருத்துவா்களே உள்ளதாகத் தெரிய வருகிறது.

சுமாா் 21 லட்சம் மக்கள்தொகை கொண்ட விழுப்புரம் மாவட்டத்துக்கு இது போதாது. எனவே, கூடுதலாக அரசு மருத்துவா்களை நியமிக்கவேண்டும். அத்துடன் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக 10 மருத்துவா்களை நியமிக்கவேண்டும். மாவட்டத்தில் 153 அரசு செவிலியா்கள் உள்ளனா். ஒப்பந்த அடிப்படையில் 50 செவிலியா்களும், கொரோனா சிகிச்சைக்கென 40 செவிலியா்களும் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதுவும் மிகக் குறைவு. எனவே, உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு 25 செவிலியா்கள் உள்பட மாவட்டத்துக்கு 100 செவிலியா்களை ஒப்பந்த அடிப்படையிலாவது நியமிக்கவேண்டும் என தெரிவித்துள்ளாா்

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil