வானூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருட்டு: போலீஸார் விசாரணை

வானூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில்  பணம் திருட்டு: போலீஸார் விசாரணை
X
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் வீட்டில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே கிளியனூர் போலீஸ் சரகம் எரையானூரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). இவர் தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார்.இவர் தனது குடும்பத்துடன் புதுவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வினோத்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வினோத்குமார் தனது வீட்டுக்கு விரைந்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து கிளியனூர் போலீசில் புகார் செய்தார், உடனடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!