எங்கே தேடுவேன்? வானூர் எம்எல்ஏவை எங்கே தேடுவேன்?: குழப்பத்தில் மக்கள்

எங்கே தேடுவேன்? வானூர் எம்எல்ஏவை எங்கே தேடுவேன்?: குழப்பத்தில் மக்கள்
X

பூட்டியே கிடக்கும் வானூர் எம்எல்ஏ அலுவலகம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எப்பொழுதும் பூட்டியே இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள், ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளது, இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், செஞ்சி, விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் திமுகவும், திண்டிவனம், வானூர் தொகுதிகளில் அதிமுகவும், மயிலம் தொகுதியில் பாமகவும் வெற்றி பெற்றன,

இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மக்களின் குறைசார்ந்த மனுக்களை பெற்று வருகின்றனர், ஆனால் வானூர் தொகுதி மக்கள் யாரிடம் மனு கொடுப்பது என தெரியாமல் எம்எல்ஏ அலுவலகம் வந்து பார்த்தால் பதில் சொல்ல கூட ஆள் இல்லாமல் எப்போதும் பூட்டியே கிடப்பதாக அதிமுக எம்எல்ஏ சக்கரபாணி மீது குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!