வானூர் பகுதியில் அமைச்சர் பொன்முடி வாக்கு சேகரிப்பு

வானூர் பகுதியில் அமைச்சர் பொன்முடி வாக்கு சேகரிப்பு
X

வானூர் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் பொன்முடி 

வானூர் பகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அமைச்சர் பொன்முடி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

தமிழக உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட 20வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் பிரேமாவுக்கு உதயசூரியன் சின்னத்திலும், பொம்மையார்பாளையம் ஊராட்சியில் 18வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் வளர்மதி சேகருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,

அப்போது சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.முத்துகுமரன், சே. அறிவழகன், மாவட்ட குழு உறுப்பினர் அர்ச்சுணன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!