வானூர் சட்டமன்ற தொகுதியில் வி.சி.க வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் பிரசாரம்

வானூர் சட்டமன்ற தொகுதியில் வி.சி.க வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் பிரசாரம்
X
விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின்சார்பாக போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் வன்னிஅரசை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தீவிரமாக வாக்கு வேட்டையாடினர்.

கண்டமங்கலம் ஒன்றியக்கமிட்டி சார்பில் வாக்கு கேட்டு கண்டமங்கலம் பகுதியில் ஒன்றிய செயலாளர் கே.குப்புசாமி தலைமையில் பிரசாரம் மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.சௌந்தர்ராஜன், என்.பழனி, கே.சுந்தரமூர்த்தி,கே.ஐயப்பன், கே.உலகநாதன் இ.லெனின் ஜி.துரை உட்பட பலர் கலந்து கொண்டு பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!