வானூரில் புதிய நீதிமன்ற திறப்பு விழா
புதிய நீதிமன்ற கட்டடத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி திறந்து வைத்தார்.
வானுாரில் 6.88 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. திருச்சிறம்பலம் கூட்ரோட்டில் போதிய இடவசதியின்றி குற்றவியல் நீதிமன்றம் இயங்கி வந்தது. இதையடுத்து, கடந்த 2020ம் ஆண்டு அதிமுக., ஆட்சியின் போது, முன்னாள் அமைச்சர் சண்முகம், எம்எல்ஏ., சக்கரபாணி ஆகியோரின் முயற்சியால், புள்ளிச்சப்பள்ளத்தில் புதிய நீதிமன்ற கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, 6. 88 கோடி ரூபாய் செலவில் புதிய நீதிமன்ற கட்டடம் கட்டடப்பட்டது. இதில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டப்பட்டது. இன்று 9ம் தேதி காலை 10: 30 மணியளவில் நீதிமன்ற கட்டடத்தை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி திறந்து வைத்தார். விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu