வானூர் அருகே குண்டர் சட்டத்தில் இருவர் கைது

வானூர் அருகே குண்டர் சட்டத்தில் இருவர் கைது
X
வானூர் அருகே உள்ள கோட்டை கரை பகுதியைச் சேர்ந்த தொடர் குற்றத்தில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கோட்டக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமரவேலன் என்ற குமரவேல் (வயது 37), கோட்டக்கரை பாரதிபுரம் பகுதியை சேர்ந்த பாலச்சந்தர் என்ற சந்துரு (36) ஆகியோர் மீது மீது ஆரோவில் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 10.8.2022 அன்று கோட்டக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (50) என்பவரை கொலை செய்த வழக்கில் குமரவேலன், பாலச்சந்தர் ஆகிய இருவரையும் ஆரோவில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து இவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்களுடைய குற்றசெயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் குமரவேலன், பாலச்சந்தர் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும். அவர்கள் இருவருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்