முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பாமக நிறுவனர் இராமதாஸுடன் சந்திப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்து பேசினார்
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்து பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அவ்வையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவி.சண்முகம் இவர் கடந்த சில ஆண்டுகளில் அதிமுக கட்சியில் அடையாளம் காணப்பட்டு, வெகு சீக்கிரத்தில் எம்எல்ஏவாகி, அமைச்சராகவும் ஆனவர், அதே வகையில் அதிமுகவில் ஜெ வால் கொஞ்ச காலம் ஓரம் கட்டபட்டு, பின்னர் சசிகலா ஆதரவில் மீண்டும் அதிமுகவில் பதவிக்கு வந்தார், ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுக உடைந்தது, அப்போது ஏற்பட்ட வெற்றிடத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு, தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றார். அதனால் அவருக்கு நாளுக்கு நாள் சிக்கல் கூடி கொண்டே சென்றது. ஆனால் மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது. தற்போது மாநிலங்களவை தேர்தல் வந்தது. அதில் சாதூரியமாக காய் நகர்த்தி பல சிக்கல்களுக்கிடையே மாநிலங்களவை உறுப்பினராக டெல்லி அரசியலில் நுழைந்து விட்டார். இந்நிலையில் அவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸை தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அர்ச்சுனன் உட்பட பலர் உடனிருந்தனா்.மேலும் விழுப்புரத்தில் அவருக்கு கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu