/* */

வானூர் பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

Food Safety Department - விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

வானூர் பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
X

வானூர் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Food Safety Department -விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன், இளங்கோவன் ஆகியோர் கொண்ட குழுவினர் வானூர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உணவின் தரத்தை சரிபார்த்தனர். அங்கிருந்த கெட்டுப்போன உணவுகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்திய 2 ஓட்டல்களுக்கு தலா ரூ. 5 ஆயிரமும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 4 ஓட்டல்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 July 2022 10:28 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்