கடற்கரையில் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்த நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள்
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட நொச்சிக்குப்பம் மீன்பிடி கடற்கரையை ஆக்கிரமிப்பு செய்யும் தனியார் நிறுவனத்திடமிருந்து மீட்டு கொடுக்க அப்பகுதி மீனவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது: விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கடற்கரை கிராமமான நொச்சிக்குப்பத்தில் பாரம்பரியமாக கடல்சார்ந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமான படகுகளை நிறுத்தவும், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பதற்கும், கருவாடு உலர்த்தவும், பக்கத்து மீனவ கரவலை கிராமம் தொழில் செய்வதற்காகவும் முக்கிய இடமான கடலிலிருந்து 80 அடி ஒட்டியுள்ள கடற்கரையை சுப்ரீம் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் எந்த அரசு ஆணமும் இல்லாமல் கடற்கரை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சுற்று கம்பி வேலி அமைத்துக்கொண்டிருக்கின்றனர்,
இதை உடனடியாக தடுத்து நிறுத்தி கடற்கரையை மீனவர்களின் பயன்பாட்டிற்கு மீட்டு உருவாக்கம் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu