கோட்டகுப்பம் நகராட்சியில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு

கோட்டகுப்பம் நகராட்சியில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு
X

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் நகராட்சியில் சிபிஎம் வேட்பாளர் தீவிர இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வானூர் வட்டத்திற்குட்பட்ட கோட்டகுப்பம் நகராட்சியில் வேட்பாளர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஃபர்கத் சுல்தானாவை ஆதரித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் சுதா சுந்தர்ராமன், வீடு வீடாக வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரித்தார்.

நிகழ்ச்சியில் சிபிஎம் விழுப்புரம் மாவட்டசெயலாளர் என்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்குமரன், எஸ்.கீதா, சே.அறிவழகன், வானூர் வட்ட செயலாளர் எம்.கே.முருகன், புதுச்சேரி உழவர்கரை செயலாளர் ராம்ஜி, மாதர் சங்க செயலாளர் சத்தியா, தலைவர் இளவரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
why is ai important to the future