சக பயணியிடம் குழந்தையை கொடுத்துவிட்டு எஸ்கேப்: அரசுப் பேருந்தில் பரபரப்பு

சக பயணியிடம் குழந்தையை கொடுத்துவிட்டு எஸ்கேப்: அரசுப் பேருந்தில் பரபரப்பு
X

மீட்கப்பட்ட ஆண் குழந்தை.

சென்னையிலிருந்து புதுச்சேரி சென்ற அரசு பேருந்தில் பெண் ஒருவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு இறங்கிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் இருந்து அரசு பஸ் ஒன்று புதுவை நோக்கி வந்தது. அப்போது அந்த பேருந்தில் சென்னை நீலாங்கரையில் இருந்து ஒருவர் 4 மாத ஆண் குழந்தையுடன் தனியாக ஏறினார்.

அதன்பின் மற்றொரு ஸ்டாப்பில் புதுச்சேரியை சேர்ந்த சரஸ்வதி என்பவர் ஏறினார். பேருந்தில் ஓரளவு கூட்டமாக இருந்ததால் சரஸ்வதியிடம், அந்தக் குழந்தையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு அந்த நபர் ஒப்படைத்தார். பின்னர் உடல் சோர்வு காரணமாக படிக்கட்டிலில் உட்கார்ந்து அவர் பயணம் செய்து வந்தார்.

இதனைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து சரஸ்வதி பார்த்தபோது, அந்த நபர் எங்கு இறங்கினார் என்று தெரியவில்லை. அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி உடனடியாக மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மரக்காணம் போலீசார் இந்த புகாரை கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறு கூறினார். அதன்படி சரஸ்வதி கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 மாத கைக்குழந்தையை விட்டுச்சென்ற நபர் யார், எங்கிருந்து அந்த குழந்தையை கொண்டு வந்தார்.

இந்த குழந்தை அவருடைய தானா வேறு யாருடைய குழந்தையாவது திருடி வந்தாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பேருந்து கண்டக்டர் 4மாத அழகிய ஆண் குழந்தையை கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் பயணியுடன் இணைந்து மகளிர் போலீசாரும் ஆண் குழந்தையை கவனித்து வருகின்றனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!