நிபந்தனையின்றி கல்வி கடன் வழங்க வேண்டும்: ஜனநாயக வாலிபர் சங்கம் தீர்மானம்

நிபந்தனையின்றி கல்வி கடன் வழங்க வேண்டும்: ஜனநாயக வாலிபர் சங்கம் தீர்மானம்
X

வானூர் அருகே நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம்

வானூர் அருகே நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநாட்டில் நிபந்தனை இன்றி கல்வி கடன் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் உள்ள என்பிஆர் திருமண மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வானூர் வட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டச் செயலாளர் எஸ்.பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எஸ்.பிரகாஷ் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் எஸ்.பார்த்திபன் மாநாட்டை வாழ்த்தி பேசினார். மாவட்ட செயலாளர் எஸ். அறிவழகன் கலந்துகொண்டு மாநாட்டு நிறைவுறையாற்றினார்.

மாநாட்டில் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் எந்தவித நிபந்தனைகளும் விதிக்காமல் வங்கிகள் கல்வி கடன் வழங்க வேண்டும், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இயங்கி வரும் அரசு கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்,

மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக வட்டத் தலைவராக பி.அன்பு, செயலாளராக கே.லெனின் சோழன், பொருளாளராக தினேஷ் பாபு ஆகியோர் உட்பட 16 பேர் கொண்ட புதிய வானூர் வட்ட குழுவும் தேர்வு செய்யப்பட்டனர், முடிவில் பி.அன்பு நன்றி கூறினார்.

Tags

Next Story
the future of ai in healthcare