கோட்டகுப்பம் நகராட்சியில் வாலிபர் சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு

கோட்டகுப்பம் நகராட்சியில் வாலிபர் சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு
X

கோட்டகுப்பத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் நகராட்சியில் வாலிபர் சங்கத்தினர் சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டகுப்பம் நகராட்சியில் 18-வது வார்டில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பர்கர் சுல்தானா போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சே.அறிவழகன் தலைமையில் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

நிகழ்ச்சியில் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஏ.ஆனந்த், தலைவர் பாஸ்கர், மாணவர் சங்க ஜெயபிரகாஷ், வானூர் வட்ட செயலாளர் பாலமுருகன், அபுபக்கர் சித்திக் உட்பட பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!