/* */

அதிமுக 10 ஆண்டில் செய்யாததை 10 மாதத்தில் செய்து உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின்

அதிமுக கடந்த 10 ஆண்டில் செய்யாததை 10 மாதத்தில் திமுக செய்து உள்ளது என முதல்வர் ஸ்டாலின் விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் கூறினார்

HIGHLIGHTS

அதிமுக 10 ஆண்டில் செய்யாததை 10 மாதத்தில் செய்து உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின்
X

பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார்பில் நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட பெரிய கொழுவாரியில் மாவட்டத்தில் 5வது சமத்துவபுரமாக கடந்த 2010-2011 திமுக ஆட்சியில் 2.88 கோடி மதிப்பீட்டில் 100 வீடுகள் கொண்ட பெரியார் சமத்துவபுரம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது,

அதனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக கிடப்பில் போட்ட சமத்துவபுரத்தை, திமுக ஆட்சி பொறுப்பேற்ற 10 மாதத்தில் திறந்து உள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார், முன்னதாக முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக சார்பில் வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து பொது மக்கள் கொடுத்த மனுக்களை பெற்று கொண்டார், தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.24 கோடியே,77ஆயிரம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 38 அரசு கட்டிடங்களை திறந்து வைத்தார், 10 ஆயிரத்து,722 பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார்பில் ரூ.42 கோடியே,69 லட்டத்து,98 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கினார்,

அதனை தொடர்ந்து திண்டிவனம் தொழிற்பேட்டைக்கு நேரில் சென்று அங்கு தனியார் நிறுவனம் மூலம் ரூ.500 கோடியில் அமைய உள்ள தோல் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்,

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, பெரிய கருப்பன், மஸ்தான், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன்,மணிகண்ணன், ஊராட்சி துறை தலைமை செயலர் அமுதா, ஆட்சியர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 April 2022 2:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?