வளர்ச்சி திட்ட பணிகள்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் த. மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் (14.06.2022) ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், பனங்குப்பம் ஊராட்சியில், ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, நடப்பு கல்வியாண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் இப்பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கெங்கராம்பாளையம் ஊராட்சியில், ரூ.1.58 இலட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டடம் சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, நூலகம் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன்பெறும் வகையில் அதிகளவு புத்தகங் வரவழைத்து வைத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, சின்னபாபு சமுத்திரம் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.14.37 இலட்சம் மதிப்பீட்டில் கசிவு நீர் குட்டை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், விவசாயப்பணிக்கு ஏற்ப பணியினை விரைந்து முடித்திட வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து மருத்துவர்கள், பணியாளர்கள் வருகை குறித்து கேட்டறிந்ததுடன், சிகிச்சைப் பிரிவுகளை பார்வையிட்டு, நன்றாக பராமரிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu