சமத்துவபுர வீடு ஒதுக்கீடு: மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

சமத்துவபுர வீடு ஒதுக்கீடு: மறுபரிசீலனை செய்ய  கோரிக்கை
X

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வானூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்

வானூர் தொகுதியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் பயனாளிகள் தேர்வு மறுபரிசீலனை செய்ய விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்

விழுப்புரம் மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் வானூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்,

அதில், விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்கு உட்பட்ட கொழுவாரி ஊராட்சியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தில் பயனாளிகள் தேர்வு நடைபெற்று சுமார் ஐம்பத்தி மூன்று பயனாளிகளுக்கு சமூக அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அந்த ஒதுக்கீட்டில் தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கபடவில்லை, ஏற்கனவே வீடு இருப்பவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

அதனால் வீடு ஒதுக்கீடு பயனாளிகள் பட்டியலை மறுபரிசீலனை செய்ய வேண்டும், வீடு இல்லாத ஏழை எளிய தகுதியான பயனாளிகளை விசாரணை அடிப்படையில் மீண்டும் பயனாளிகள் தேர்வு செய்ய வேண்டும் என அந்த மனுவில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்