கடன் வழங்காத கூட்டுறவு வங்கியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கடன் வழங்காத கூட்டுறவு வங்கியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
X

பயிர்கடன் வழங்காத கிளியனூர் கூட்டுறவு சங்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பயிர்க்கடன் வழங்காத கிளியனூர் கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்தை கண்டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுக்காமல் அலைகழிக்கும், கிளியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை கண்டித்து, கூட்டுறவு கடன் சங்கத்தின் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு குறித்த காலத்தில் பயிர்க்கடன் வழங்காமல் அலைகழிக்கும் கிளியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும், கடன் கேட்டு மனு கொடுத்துள்ள உள்ள எடசேரி,கொஞ்சி மங்கலம், கிளியனூர்,தைலாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்,

ஆர்ப்பாட்டத்தில் வட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.பாலமுருகன், ஐ .சேகர், ஆர்.சேகர், வி சுந்தரமூர்த்தி ஏ.அன்சாரி கே.மாயவன், ஆர்.விஸ்வநாதன், என்.அஸ்வத்தாமன், ஜே.முகமது அனாஸ், லலிதா உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story