கண்டமங்கலத்தை தாலுகாவாக்க சிபிஎம் கோரிக்கை
ஒன்றிய செயலாளர் குப்புசாமி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டமங்கலம் ஒன்றிய 13-வது மாநாடு கு.ஐயப்பன் நினைவரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது, மாநாட்டிற்கு கே.உலகநாதன், டி.ஆனந்தபாலு, கே.ராஜேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கினர்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன் மாநாட்டை தொடங்கி வைத்தார். வேலை அறிக்கையை முன் வைத்து ஒன்றிய செயலாளர் .குப்புசாமி பேசினார், மாவட்டச் செயலாளர். என்.சுப்பிரமணியன்,மாவட்ட கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி பேசினர்.
மாநாட்டில் கண்டமங்கலத்தை தாலுக்காவாக மாற்ற வேண்டும், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்,100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக மாற்றி, ரூ.400 ஆக கூலி உயர்த்தி வழங்க வேண்டும்,பெரும் மழையில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதி மக்களின் பயிர் சேதம் வீடுகள், ஆடு, மாடுகள் இழப்பிற்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய செயலாளராக மீண்டும் கே.குப்புசாமி தேர்வு செய்யப்பட்டார், மேலும் ஒன்றிய குழு உறுப்பினர்களாக பி சௌந்தரராஜன், ஏழுமலை, உலகநாதன், மூர்த்தி, கலியபெருமாள், கோபாலக்கண்ணன், ஆனந்த பாலு, ராஜேஸ்வரி, ராஜவேல், ராஜசேகர் ஆகியோர் ஒன்றியக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் சி.ராஜசேகர் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu