கோட்டகுப்பம் நகராட்சியில் சிபிஎம் மனு தாக்கல்

கோட்டகுப்பம் நகராட்சியில் சிபிஎம் மனு தாக்கல்
X

கோட்டகுப்பம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் பர்கர் சுல்தானா

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள 18-வது வார்டில் சிபிஎம் வேட்பாளர் இன்று மனுத்தாக்கல் செய்தார்

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கோட்டகுப்பம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக மதசார்பற்ற கூட்டணி கட்சியில் சிபிஎம் கட்சிக்கு 18-வது வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் பர்கர் சுல்தானா புதன்கிழமை கோட்டகுப்பம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார். அப்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துகுமரன், சே.அறிவழகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் முகமது இஸ்மாயில் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!