வாக்கு எண்ணிக்கை மையத்தை விழுப்புரம் கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தை விழுப்புரம்  கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு
X

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன்  வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்டார்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் நாளை மறு நாள் சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்து செல்லப்படும்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சியின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள, அரசு மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான த.மோகன், இன்று (17.02.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!