இலங்கை அகதிகள் முகாமில் கலெக்டர் திடீர் ஆய்வு

இலங்கை அகதிகள் முகாமில் கலெக்டர் திடீர் ஆய்வு
X

இலங்கை தமிழர் முகாமில் கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வரும் இலங்கை அகதிகள் முகாமில் ஆட்சியர் இன்று திடீர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் த.மோகன் இன்று (21.10.2021) திடீர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

ஆய்வின்போது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு குறைகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து நபர்களின் குறைகள் கேட்டறிந்தார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தங்களுடைய குறைகள் களைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும். அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களை நோய் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!