வானூர் அரசு மாணவியர் விடுதியில் கலெக்டர் ஆய்வு

வானூர் அரசு மாணவியர் விடுதியில் கலெக்டர் ஆய்வு
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

விழுப்புரம் மாவட்டம், வானூரில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டம், வானூர் அரசினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதியில் கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவியர் சேர்க்கை குறித்தும், உணவுக்கூடம், விடுதி அறை, குடிநீர் வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

மாணவியர்களுக்கு தரமான உணவு வழங்கிடவும், விடுதியை சுத்தமாகவும், சுகாதாரமும், பராமரித்திடவும் மாவட்ட கலெக்டர் மோகன் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
நைட் 7 மணிக்கு மேல டீ குடிக்க கூடாதாமா?..அப்படி குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வரும்!..டீ பிரியர்களே உஷார்..!