கண்டமங்கலம் அருகே டூவீலர் மீது பஸ் மோதல்: பிஎஸ்என்எல் ஊழியர் உயிரிழப்பு

கண்டமங்கலம் அருகே டூவீலர் மீது பஸ் மோதல்:  பிஎஸ்என்எல் ஊழியர் உயிரிழப்பு
X

பைல் படம்.

Today Accident News in Tamil - விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பஸ் டூவீலர் மீது மோதி விபத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Today Accident News in Tamil -கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 32). இவருடைய மனைவி செல்வராணி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சந்திரசேகரன் அப்பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் டவரில் பராமரிப்பு மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.

விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் எம்.என்.குப்பம், மாரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து தனியார் பஸ் டிரைவர், பஸ்சை கண்டமங்கலம் காவல் நிலையத்தில் கொண்டு நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார். பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் சென்றனர்.

விபத்து நடந்த இடத்திற்கு கண்டமங்கலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சந்திரசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!