திருச்சிற்றம்பலத்தில் குப்பை கிடங்காய் மாறிய இந்தியன் வங்கி வளாகம்

திருச்சிற்றம்பலத்தில் குப்பை கிடங்காய் மாறிய  இந்தியன் வங்கி வளாகம்
X

வங்கியை சுற்றி கிடக்கும் குப்பைகள்

வானூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளை, குப்பைகளுக்கிடையே செயல்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம்,வானூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் இயங்கி வரும் இந்தியன் வங்கி அருகில் குப்பைகள் அதிக அளவில் சேர்ந்து குப்பை கிடங்காக காட்சி அளித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசி வருகிறது,

மேலும், வங்கி உள்ள கட்டிடத்தில் இருந்து வரும் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது, இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அங்கு கொசு உற்பத்தி அதிகமாகிறது.

தினசரி வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனை செய்கிறார்களோ இல்லையோ, இங்கு குப்பைகளில் உற்பத்தி ஆகும் கொசுக்களால் தவறாமல் கடிபடுகின்றனர். மேலும், டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள், வங்கி மட்டுமின்றி, வந்து செல்வோர் செல்லும் இடமெல்லாம் பரவுகின்றன.

எனவே, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தி அங்கு உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானூர் ஒன்றிய பாஜக தலைவர் தங்க.சிவக்குமார் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!