கோட்டகுப்பம் அருகே சாலை விபத்தில் வங்கி ஊழியர் உயிரிழப்பு

கோட்டகுப்பம் அருகே சாலை விபத்தில் வங்கி ஊழியர் உயிரிழப்பு
X

பைல் படம்.

கோட்டகுப்பம் அருகே வங்கி ஊழியர் சாலை விபத்தில் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டக்குப்பத்தை அடுத்த இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (38). இவா், புதுச்சேரியில் உள்ள தனியாா் வங்கியில் கடன் பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தாா். இவர் வழக்கம்போல் திங்கட்கிழமை, வீட்டிலிருந்து மோட்டாா் சைக்கிளில் கோட்டக்குப்பம் அருகே கோட்டைமேட்டிற்குச் சென்று கொண்டிருந்தாா். கோட்டைமேடு கிழக்கு கடற்கரை சாலையில் சந்திராயன்குப்பம் செல்லும் சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் இவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் சண்முகம் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் விரைந்து வந்து காயமடைந்த சண்முகத்தை மீட்டு புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story
ai marketing future