விழுப்புரம் அருகே அண்ணா சிலை அவமதிப்பு: போலீசார் குவிப்பு

விழுப்புரம் அருகே அண்ணா சிலை அவமதிப்பு: போலீசார் குவிப்பு
X

காலணி அணிவிக்கப்பட்ட அண்ணா சிலை.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் அண்ணா சிலைக்கு காலணி மாலை அணிவித்து அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அண்ணா முழு திருவுருவ சிலை உள்ளது. இந்த சிலைக்கு மர்ம நபர்கள் யாரோ மக்கள் நடமாட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில் அண்ணா சிலையை சிவப்பு துணியால் மூடிவிட்டு, அவரது கழுத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா படத்துடன் இணைந்த காலணி மாலையை அணிவித்து சென்றுள்ளனர்.

இதனை காலையில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவல் அடுத்து விரைந்து வந்த போலீசார் காலணி மாலையை அகற்றினர். தொடர்ந்து அப்பகுதியில் திமுக பிரமுகர்கள் குவிந்து வருவதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த சம்பவத்தால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!