வார்டு மறுவரையறையை திரும்ப பெற கோட்டகுப்பம் நகராட்சி தீர்மானம்

வார்டு மறுவரையறையை  திரும்ப பெற கோட்டகுப்பம் நகராட்சி தீர்மானம்
X
குளறுபடியான வார்டு மறுவரையறையை திரும்ப பெற வலியுறுத்தி கோட்டகுப்பம் அனைத்து கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றினர்

விழுப்புரம் மாவட்டம்,கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் உ.முகமது பாருக் தலைமையில் மார்க்சிஸ்ட் , முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விசிக, மதிமுக, தேமுதிக, அதிமுக, பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் சமூக அமைப்பின் நிர்வாகிகள் கலந்துக்கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய வார்டு மறுவரையறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை களைந்து வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் சமமாக பிரித்து மீள்மறுவரையறை செய்து இறுதி வார்டு மறுவறையறை செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

கோட்டக்குப்பம் பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 18 வார்டுகளாக இருந்ததை மறுவறையறை செய்து 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டு மறுவறையறை அறிக்கை கடந்த 18-12-2021 அன்று கோட்டக்குப்பம் நகராட்சியின் ஆணையரால் வெளியிடப்பட்டது.

அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவரையறை அறிக்கை அவசரகதியில் செய்யப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறை செய்யப்பட்ட விதமும், அதற்கான அளவுகோளும் சரியானவையாக இல்லை. அதிகமான வாக்காளர்களை கொண்டுள்ள சிறுபான்மை மக்களுக்கு கூடுதல் வார்டுகள் ஒதுக்காமல் பிரதிநிதித்துவம் குறைத்து வழங்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

மேலும் இந்த மறுவறையறையில் பல முறைகேடுகள் செய்யப்பட்டதாகவும் அமைந்துள்ளது. இந்த மறுவறையறை சட்டம் 2017க்கு எதிராக உள்ளதால் இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, ஆணையரால் வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவறையறை அறிக்கையை உடனடியாக திரும்பபெற்று, வார்டு மறுவரையறையில் செய்யப்பட்டுள்ள அனைத்து குளறுபடிகளையும் களைந்து வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் சமமாக வார்டுகளை பிரித்து மீள்மறுவரையறை செய்து வார்டுகளை இறுதிப்படுத்த தமிழக தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்