100 நாள் வேலைத்திட்டத்தில் பணி நேரம் அதிகரிப்பு: பெண்கள் எதிர்ப்பு

100 நாள் வேலைத்திட்டத்தில் பணி நேரம் அதிகரிப்பு: பெண்கள் எதிர்ப்பு
X
விழுப்புரம்- வானூர் தொகுதி- பொம்பூர் கிராமத்தில் 100 நாள் வேலையில் நேரம் அதிகரிப்பு பெண்கள் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை கால நேர மாற்றம் பெண்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்குட்பட்ட பொம்பூர் கிராமத்தில் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது, அதில் இதற்கு முன்பு வேலை நேரம் நான்கு மணி நேர என வேலை வழங்கியதாக தெரிகிறது.

தற்போது வேலை நேரத்தை 8 மணி நேரமாக உயர்த்தப்பட்டதாகக்கூறப்படுகிறது. இதனை கண்டித்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த மயிலம் காவல் நிலைய ஆய்வாளர் கிருபா லட்சுமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்ல வைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!