தீ விபத்தில் 10 குடிசைகள் எரிந்தன - பெரும் சோகம்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 10 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகியது, பெரும் சோகத்தில் அனைவரையும் ஆழ்த்தியது .

விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த கரசானூர் சித்தேரி கரை காலனி அமைந்துள்ளது. அங்கு இரவு மைதிலி என்பவர் கூரை வீட்டில் உணவு சமைத்து கொண்டிருந்தார். அப்போது தீப்பொறி கூரை வீட்டில் பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ காற்றில் மளமளவென பரவி பக்கத்தில் இருந்த கூரை வீடுகளுக்கு அடுத்தடுத்து பரவியது.

தீ பரவியதால் அப்பகுதியினர் அருகிலுள்ள வானூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அப்பகுதியில் உள்ள 10 குடிசை வீடுகளுக்கு பரவியதால் 10 குடிசை வீடுகளும் முழுவதுமாக எரிந்து நாசமாகின.

தீ விபத்தில் வீட்டிலிருந்த உடமைகள், பத்திரங்கள், கட்டில், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த வானூர் வட்டாட்சியர் சங்கரலிங்கம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீ விபத்து குறித்து கேட்டறிந்தனர்.

Tags

Next Story