திருவெண்ணெய்நல்லூர் அருகே கோயிலில் நகை திருடிய இளைஞர் கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே கோயிலில் நகை திருடிய இளைஞர் கைது
X

திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையம் பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே சாமி கழுத்தில் இருந்த நகையை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி, திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட கொத்தனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற புத்துமாரி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் பூசாரியாக பெருமாள் என்பவர் உள்ளார். இவரின் பேரன் பிரகாஷ் (30). இவர் கோவிலுக்கு சாமி கும்பிட பக்தர்கள் வந்துள்ளார்கள் என்று கூறி, கோவில் சாவியை எடுத்து சென்று உள்ளார். பின்னர் கோவிலின் பூட்டை திறந்து அம்மன் கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை திருடி சென்றுவிட்டார்.

இதுகுறித்து, ஊர் நாட்டாமை தேவநாதன் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆய்வாளர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து, பிரகாசை கைது செய்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!