திருவெண்ணைநல்லூர் அருகே 222 போருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் பொன்முடி வழங்கல்

திருவெண்ணைநல்லூர் அருகே 222  போருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் பொன்முடி வழங்கல்
X

திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைச்சர் பொன்முடி 222 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணைநல்லூர் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னசெவலை ஊராட்சியில் இன்று ஆகஸ்ட் 24ஆம் தேதி மாவட்ட வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆகியவற்றின் சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு, மாவட்ட வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆகியவற்றின் மூலம் இலவச வீட்டு மனை பட்டா, உதவி தொகை ஆணை, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் என 222 பயனாளிகளுக்கு ரூபாய் 24 லட்சத்து,70ஆயிரத்து, 590 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். மாவட்ட ஆட்சியர் மோகன், எம்எல்ஏ புகழேந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், ஒன்றிய சேர்மேன் ஓம் சக்தி வேல், ஊராட்சி மன்ற தலைவர் மேகலா சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!