விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி
X
விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது பாராட்டு குவிந்து வருகின்றன.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரித்திக் விஜயபிரபாகரன்.

இந்த மாணவர் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்தாண்டு படித்து வந்தார். இவர் அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்தும் தனியாக வீட்டிலும் படித்து நீட் தேர்வு எழுதினார்.

தற்போது வெளியாகியுள்ள நீட் தேர்வு முடிவுகளில் இந்த மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவருக்கு பெற்றோர், ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!