/* */

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், மணம்பூண்டி ஒன்றிய அலுவலகம் எதிரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

கண்டாச்சிபுரம் தாலுக்கா, மணம்பூண்டி ஒன்றிய அலுவலகம் எதிரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுக்கா, மணம்பூண்டி ஒன்றிய அலுவலகம் எதிரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் எம்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார், வட்டக்குழு உறுப்பினர்கள் பி.வெங்கடேசன், வி.முருகேசன், டி.குப்பன் மற்றும் மாவட்டகுழு உறுப்பினர் என்.எஸ்.ராஜா, வட்ட செயலாளர் ஏ.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வி.அர்ஜுனன், மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி மாநில துணைத்தலைவர் ஏ.டி.கோதண்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் எஸ்.கணபதி, ஆகியோர் கலந்துகொண்டு 100 நாள் வேலைக்கும், உணவு மாணியத்திற்கும், கிராமப்புற வளர்ச்சிக்கும், ஒன்றிய பட்ஜெட்டில் நிதி குறைத்ததை கண்டித்தும், 100 நாள் வேலையை 200 நாட்களாகவும்.. கூலி ரூ.600 உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், கிராமப்புறத்தில் வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என வலியுறுத்தியும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மனு கொடுத்த அனைவருக்கும் பாரபட்சமின்றி வீடு வழங்கிட வேண்டும், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் வட்டகுழு உறுப்பினர்கள் ஏ.வி.கண்ணன், பி.முருகன், எம்.பழனி, கிளைசெயலாளர் வி.பீட்டடர் உள்ளிட்ட 100-மேற்பட்ட விவசாயத் தொழிலாளிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 18 Feb 2022 11:49 AM GMT

Related News