வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
X

வனத்துறையினர் வாகனத்தை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

விழுப்புரம் அருகே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய வனத்துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரசூர் அடுத்த இருவேல்பட்டு இருந்து காரப்பட்டு செல்லும் சாலையில் புதியதாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது,

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மாவட்ட வன துறை அலுவலர்கள், சாலை உள்ள பகுதி மாவட்ட வன துறைக்கு சொந்தமானது எனவும்.முறையான அனுமதி பெற்ற பிறகே சாலை அமைக்கும் பணி நடைபெற வேண்டுமென சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்,

இதற்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட வன அலுவலர் வந்த வாகனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!