வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்
X

விபத்துக்குள்ளான வேன்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம், மடவிளாகம் கிராமம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து 16 க்கும் மேற்பட்டோர் காயம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் மனைவி தமிழரசி என்பவருக்கு இன்று வளைகாப்பு நடைபெற்றபின் சொந்த ஊரான பல்லேரி பாளையத்திற்கு வேனில் சென்றனர்.

மடவிளாகம் ஏரியின் அருகில் ஆலம்பாடி செல்லும் ரோட்டின் அருகே வந்தபோது, கண்டாச்சிபுரம் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வேனை திருப்ப முயற்சித்தபோது அங்கிருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 12 பெண்கள், இரண்டு ஆண்கள், ஒரு பெண் குழந்தை மற்றும் வேன் டிரைவர் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india