சோலார் மின்வேலி அமைக்க விவசாய சங்கம் கோரிக்கை

சோலார் மின்வேலி அமைக்க விவசாய சங்கம் கோரிக்கை
X

தமிழ்நாடு விவசாய சங்க பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்

தமிழ்நாடு விவசாய சங்க பேரவைக் கூட்டத்தில் வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க சோலார் மின்வேலி அமைக்க வலியுறுத்தல்

வன விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க சோலார் மின்வேலி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கோவிலூர் அருகேதமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கண்டாச்சிபுரம் தாலுக்கா பேரவை கூட்டம், கண்ணப்பர் திருமண மண்டபத்தில் வட்டத் தலைவர் என்.வீரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவராமன், மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், மாநில குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ,கண்டாச்சிபுரம் தாலுக்கா தலைநகர் பகுதியில் உடனடியாக ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைத்திட வேண்டும்,கண்டாச்சிபுரம் தாலுக்கா தலைநகருக்கு அனைத்து கிராமங்களில் இருந்து வந்து போக போக்குவரத்து வசதி ஏற்படுத்திட வேண்டும்,விவசாய நிலங்களில் வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சோலார் மின்வேலி அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு தீர்மானம் நிறைவேற்றினர்,

கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக வட்டத் தலைவராக எம் ராமலிங்கம் வட்ட செயலாளராக ஓகே. முருகன் வட்ட பொருளாளராக எம். நாராயணன் மற்றும் துணைத் தலைவர்களாக கடகால் கே முருகன், எம் பழனி, என்.வீரன், துணைச் செயலாளர்களாக டி.பரமானந்தம், எம்.விமல், விஜயகுமார் மற்றும் வட்ட குழு உறுப்பினர்கள் 20 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டனர்,



Tags

Next Story
ai automation in agriculture