திருக்கோவிலூர் அருகே தி.மு.க. கொடி எரிக்கப்பட்டதால் பரபரப்பு

திருக்கோவிலூர் அருகே தி.மு.க. கொடி எரிக்கப்பட்டதால் பரபரப்பு
X
தி.மு.க. கொடிக்கம்பம்.
திருக்கோவிலூர் அருகே தி.மு.க. கொடி எரிக்கப்பட்டது இரு சமூகத்தினர் இடையே பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் பகுதியில் நேற்று இரு தரப்பினர் மோதிக் கொண்டனர், இந்நிலையில் அப்பகுதி தி.மு.க மாவட்ட கவுண்சிலரும், ஒன்றிய செயலாளருமான ரவிச்சந்திரன் என்பவர் தான், இந்த பிரச்சினையை தூண்டி விட்டு சாதி கலவரமாக மாற்ற முயற்சி செய்து வருவதாக ஒரு பிரிவு மக்கள் குற்றம்சாட்டி, தங்கள் பகுதியில் இருந்த தி.மு.க. கொடி கம்பத்தில் பறந்து கொண்டிருந்த தி.மு.க. கொடியை கீழே இறக்கி, அதனை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்,

இதனால் மேலும் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகி, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. நேரடியாக தலையிட்டு அப்பகுதி மக்கள் மத்தியில் சமூக நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags

Next Story
ai future project