திருக்கோவிலூர்: பெண் வேட்பாளருக்கு மிரட்டல், கண்டாச்சிபுரத்தில் மோதல் அபாயம்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட முகையூர் ஒன்றியம், கண்டாட்ச்சிபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பெண் வேட்பாளருக்கு மிரட்டல் விடும் எதிர் வேட்பாளர் கணவரால் பதட்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோயில் தொகுதிக்கு உட்பட்ட முகையூர் ஒன்றியம் கண்டாச்சிபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிடும் ரேவதி கணபதி என்பவர் இன்று கண்டாச்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை கண்காணித்துக் கொண்டிருந்தார், அப்போது அங்கு வந்த அதே ஊராட்சியில் பூட்டு சாவி சின்னத்தில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீதேவியின் கணவர் ரவிக்குமார் என்பவர் பாதுகாப்பு அங்கிருந்த போலீசார் முன்னிலையில் ஆட்டோ சின்ன வேட்பாளர் ரேவதியிடம் திடீரென வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தார். அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது, உடனடியாக இந்த நிகழ்வை பலர் செல்போனில் படம் எடுப்பதை கண்ட போலீசார் விரைந்து வந்து ரவிக்குமாரை வெளியேற்றியதாக தெரிகிறது, இந்நிலையில் பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதே அரிது, இதுமாதிரி நபர்களால் பெண்கள் சமூக வெளிக்கு வருவது அரிதாகவே மாறிவிடுமோ என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.பெண் வேட்பாளர் மிரட்டலுக்கு பயந்து அழுத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு மற்றும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu