விபத்தில் காயம் அடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பிய ஆட்சியர்

விபத்தில் காயம் அடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பிய ஆட்சியர்
X

விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி சிகிச்சைக்கு அனுப்பிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகன்

The collector who sent him to the hospital until he was injured in the crash

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் வட்டம், ஏமப்பூர், ஏரிக்கரை பகுதியில் (18.06.2022) கொங்கராயன்நல்லூர் பகுதியினை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் விழுப்புரத்திலிருந்து கொங்கராயன்நல்லூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது எதிரே வந்த இருசக்கர வானத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியினை முடித்துக் கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் ஆகியோர் அவ்வழியாக விழுப்புரத்திற்கு வரும்பொழுது விபத்தை பார்த்து வாகனங்களை நிறுத்தி காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்ப மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறியதுடன், அதிகமாக காயமடைந்த ஆறுமுகத்தை 108 வாகனத்தை வரவழைத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், மருத்துவ கல்லூரி முதல்வரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு விபத்தில் காயமடைந்தவருக்கு உடனடியாக உயர் சிகிச்சை வழங்கிட வேண்டும் என தெரிவித்ததுடன், விபத்தில் காயமடைந்தவர்களை 108 வாகனத்தில் அழைத்துச் செல்லும் வரை உடனிருந்து அதன் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்