வட்டாட்சியர் சமாதானம் செய்ததால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது

வட்டாட்சியர் சமாதானம் செய்ததால்  போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது
X

கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன் சமாதான கூட்டம் நடத்தினார்

திருக்கோவிலூர் அருகே வடகரைதாழனூரில் சமூக விரோத செயல்களை தடுக்க வலியுறுத்தி நடக்கவிருந்த போராட்டம் வட்டாட்சியர் சமாதானத்தால் ஒத்தி வைப்பு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் அடுத்த, வடகரைதாழனூர் கிராமத்தில், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், கிராமத்தில் கஞ்சா கள்ள மது விற்பனை தடை செய்ய வேண்டும், என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்தது,

உடனடியாக தகவலறிந்த கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன், போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் சமாதான கூட்டம் நடத்தினார், கூட்டத்தில் காவல் துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர், வடகரை தாழனூரில், விரைவாக அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்படும் என்று வட்டாட்சியர் கார்த்திகேயன் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்தனர்.

Tags

Next Story