கரும்புக்கு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு
விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி, ஓம் சக்தி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் மாநாடு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மாநாட்டிற்கு ஆலைமட்ட சங்க தலைவர் எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார், ஆலைமட்ட பொருளாளர் எம்.பழனி அனைவரையும் வரவேற்று பேசினார், தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்,
புதிய நிர்வாகிகளாக ஆலை மட்ட தலைவராக எம்.ஆறுமுகம், செயலாளராக சு.வேல்மாறன் பொருளாளராக.எம்.பழனி துணைத் தலைவராக எஸ்.காசிவேல் துணைசெயலாளராக.ஆர் விஜயகுமார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஆர்.மதியழகன் கணேசன் டி.ஜெகநாதன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயத்தை சட்டமாக்க வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையினை உடனே வழங்கிட வேண்டும், பெட்ரோல், டீசல் எத்தனால் கலப்பு 80: 20 ஆக்கிட அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் எத்தனால் பிளாண்ட் அமைக்க வேண்டும், இடு பொருட்களின் கடுமையான விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உரத்திற்கான மானியம் வழங்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிராமப்புற விவசாய சாலைகளை புதுப்பிக்கவும் நீர்நிலை ஆக்கிரமிப்புக்களை அகற்றி,அனைத்து ஏரி, குளங்களை புதுப்பிக்கவும், ஜி.அரியூரில் புதியதாக துணை மின் நிலையம் ஏற்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது
கரும்பு பதிவு. பயிர் கடன் பரிந்துரை கடிதம் (எல் ஆர் எஸ்), கரும்பு வெட்ட உத்தரவு, தினசரி கரும்பு லோடு - எடை விபரம், பணம் பட்டுவாடா ஆகிய விவரங்களை உரிய விவசாயிகளுக்கு செல்போன் மூலம் உடனுக்குடன் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu