நிற்காமல் சென்ற பேருந்தின் கண்ணாடியை மாணவர்கள் உடைப்பு
அரசு பேருந்தின் உடைந்த கண்ணாடி.
Bus News Today -விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொங்கராயநல்லூர், பையூர், சேத்தூர், பையூர் மேடு, சிறுமதுரை, தொட்டி குடிசை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவெண்ணெய்நல்லூர், ஏமப்பூர், காந்திக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பேருந்துகளில் சென்று படித்து வருகிறார்கள்.
தினமும் காலை 7.30 மணி மற்றும் 8.15 மணி ஆகிய வேளைகளில் இரண்டு அரசு பேருந்துகள் மட்டும் வந்து செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் கொங்கராயனூரிலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பையூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல் மாணவர்கள் பேருந்தில் ஏறினர். சில மாணவர்கள் பேருந்தில் ஏற முடியாமல் தவித்தனர். இதற்கிடையே பேருந்து அங்கிருந்து புறப்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கருங்கற்களால் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதையடுத்து டிரைவர் பேருந்தை ஓரமாக நிறுத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் மாணவர்களிடம் சமாதானம் பேசி பிரச்சனையை சரி செய்தனர். பின்னர் அந்த பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu