வாட்ஸ் அப்பில் அவதூறு: இந்து முன்னணியினர் போலீசில் புகார்

வாட்ஸ் அப்பில் அவதூறு: இந்து முன்னணியினர் போலீசில் புகார்
X

இந்து முன்னணி குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் இந்து முன்னணினர் வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்புவதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் அப்பு என்கிற சதீஷ் தலைமையில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். மாவட்ட முன்னாள் பொதுச்செயலாளர் நேருஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனபால், ஒன்றிய பொதுச்செயலாளர் அழகேசன், செயலாளர் விஜய், செய்தி தொடர்பாளர் ரஞ்சித், செயற்குழு உறுப்பினர்கள் பத்ராசலம், ராஜி மற்றும் வெங்கடேசன், செல்வராஜ், கிளை பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம், வன்முறைக்கு இந்து முன்னணிதான் காரணம் எனவும், இந்து முன்னணியின் பெயரைக் கெடுக்கும் வகையில் மாநில தலைவரின் படத்தை தவறாக சித்தரித்து திருவெண்ணெய்நல்லூரை மையமாகக் கொண்டு செயல்படும் மக்களின் உண்மை செய்திகள் வாட்ஸ்-அப் குழுவில் பதிவு செய்தவர் மீதும், போஸ்டரை உருவாக்கியவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story