அடிப்படை வசதிகள் வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை

அடிப்படை வசதிகள் வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை
X

 சந்தைபேட்டை காலனி பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பேரூராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட சந்தைபேட்டை காலனி முதல் தெருவிற்கு கழிவுநீர் கால்வாய் வசதி, அங்கு அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் மினி டேங்க், அப்பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள தெருக்களை சீரமைக்க வேண்டும், தெருக்களுக்கு சோளார் லைட்டு போட்டு தரவேண்டும்,தெருவின் நடுவில் உள்ள மின் கம்பங்களை மாற்றி தரவேண்டும். தெருவை தினமும் தூய்மை படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் சார்பில் திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!