கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
காணாமல் போன மாணவன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் போன மாணவன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது டி.எடையார். பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. அவரது மகன் அருண்குமார். விழுப்புரத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ.2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. எனவே மோட்டார் சைக்கிளை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அருண்குமாரின் நண்பர்கள் 4 பேர் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் அருணை வெளியே அழைத்து சென்றனர். பின்னர் இரவு வெகு நேரமாகியும் அருண்குமார் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது நண்பர்களிடம் விசாரிக்க சென்றபோது அவர்களும் மாயமாகி இருந்தனர். இதற்கிடையில் அருண்குமாரின் இன்னொரு நண்பர் ஒருவர் முத்துசாமியிடம் உங்களது மகனை 4 பேர் அடித்து கொன்று ஏரியில் உள்ள கிணற்றில் வீசியதாக தகவல் தெரிவித்தார். பதறிபோன முனுசாமி தனது மகன் அருண்குமாரை தேடினார்.இந்நிலையில் அருண்குமார் அதே கிராமத்தில் உள்ள ஏரி கிணற்றில் பிணமாக மிதந்தார்.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முனுசாமி மற்றும் உறவினர்கள் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu