திருவெண்ணைநல்லூர் அருகே 11 ஆடுகள் திருட்டு: காவல்துறை தேடுதல் வேட்டை

திருவெண்ணைநல்லூர் அருகே 11 ஆடுகள் திருட்டு: காவல்துறை தேடுதல் வேட்டை
X
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே 11 ஆடுகளை திருடி சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கீழ் தனியாலம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குப்பு (வயது 60). இவர் அதே பகுதியில் இவரது வீட்டில் கொட்டகை அமைத்து 20 ஆடுகள் வளர்த்து வருகிறார்.

நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து விட்டு தனது வீட்டில் உள்ள கொட்டகையில் கட்டி விட்டு தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் காரில் அங்கு வந்த மர்ம கும்பல் ஆட்டுக்கயிற்றை கத்தியால் அறுத்து சுமார் 11 ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!