அரகண்டநல்லூர் அருகே சாராய ஊறலை அழித்த போலீசார்

அரகண்டநல்லூர் அருகே சாராய ஊறலை அழித்த போலீசார்
X

அரகண்டநல்லூர் அருகே சாராய ஊறலை கண்டுபிடித்து  அழித்த போலீஸார்

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகே சாராய ஊரலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி,அரகண்டநல்லூர் அருகே சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்ட நல்லூர் காவல் நிலைய எல்லை பகுதியான வேளாகுலம் பகுதியில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த சாராய ஊறலை கண்டுபிடிக்க உத்தரவின்படி, அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் சித்ரா மற்றும் காவலர்கள் தலைமையில் அப்பகுதியில் சென்று சோதனை செய்தனர்.அப்போது வேளாகுலம் பகுதியில் சுமார் 400 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டுபிடித்தனர், உடனடியாக சம்பவ இடத்திலேயே கொட்டி அதனை அழித்தனர். மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சாராய ஊறலை போட்டவர், கோட்ட மருதூர் கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரின் மகன் முகில் என தெரியவந்தது. விரைவில் மேற்கண்ட எதிரி மீது வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!