திருவெண்ணைநல்லூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில் கரடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (வயது 21) குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த், ராஜசேகரன் மினி லாரியில் மணல் அள்ளிக்கொண்டு பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி கோவில் அருகே வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட திருவெண்ணெய்நல்லூர் உதவி காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான காவல்துறையினர் சந்தேகப்படும் படி வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்ததில் திருட்டுத்தனமாக ஆற்றில் மணல் அள்ளியது தெரிய வந்தது.
உடனே திருட்டுத்தனமாக மணல் அள்ளி கொண்டு வந்த நெடுஞ்செழியனை கைது செய்து வழக்கு பதிவு செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய அரவிந்த் ராஜசேகரனை வலைவீசி தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu