ஏரி மண் கொள்ளை தடுக்க கோரிக்கை தமிழக விவசாயிகள் சங்கம் மனு

ஏரி மண் கொள்ளை தடுக்க கோரிக்கை தமிழக விவசாயிகள் சங்கம் மனு
X

மண் கொள்ளை தடுக்க கோரிக்கை வட்டாட்சியரிடம் மனு அளித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்

Petition in Police Station -கண்டாச்சிபுரம் அருகே ஏரியில் அனுமதி இன்றி வண்டல் மண் கடத்தலை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்தனர்.

Petition in Police Station - விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் கனிமவளங்கள் மண்ணை கொள்ளையோ கொள்ளை அடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட காரணதாங்கள் ஏரியில் பெரிய டாரஸ் மூலம் 800- நடைக்கு மேல் ஏரி மண்ணை விழுப்புரம் மெயின் ரோட்டில் ஓட்டேரிக்கு செல்லும் பெரிய பாலம் அருகில் கோடிக்கணக்கில் விற்பனை செய்த, செய்ய காத்திருக்கும் ரியல் எஸ்டேட்டு நிலத்தில் மண்ணை அடித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து கண்டாச்சிபுரம் பகுதியில் விவசாயிகள் வண்டல் மண்ணுக்கும், அரசு வீடு கட்டும் திட்டத்திற்கும் கடக்கால் நிரப்புவதற்கு ஏரி மண்ணுக்கு அனுமதி கேட்டாலும் வட்டாட்சியர்,அனுமதி கொடுக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்.

ஆனால், டாரஸ் மூலம் தொடர்ந்தும் மண்ணை கடத்தும் கண்டாச்சிபுரத்தை சேர்ந்த குணசேகரன் மகன் சபாபதி, மண்ணை கொள்ளையடித்து பெரிய பெரிய ரியல் எஸ்டேட் காரர்களுக்கு கொடுத்துவருகிறார். உடனடியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மண்ணை எடுக்கும் ஜேசிபி, மண்ணை ஏற்றி செல்லும் டாரஸ் லாரியை கையகப்படுத்தி வழக்குப்பதிவு செய்து கைது செய்திட வேண்டும்,

மேலும் காரணதாங்கள் ஏரியிலிருந்து ஓட்டேரிக்கு செல்லும் ஓடை வாய்க்காலை ஏரி மண்ணை கொள்ளையடிப்பதற்காக இருபுறத்தில் உள்ள கரைகளை சரித்து மண்னை சமப்படுத்தி லாரி செல்லும் பாதையாக மாற்றியுள்ளனர். இதனால், பருவ மழை காலங்களில் நீர் வரத்து பாதிக்கப்படும்,

எனவே, உடனடியாக ரியல் எஸ்டேட் நிலத்தில் கொட்டப்பட்ட மண்ணை ஆய்வு செய்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். எனவும் மேலும் மேற்கண்ட ரியல் எஸ்டேட்டுக்கு அருகில் பெரிய ஓடை வாய்க்கால் செல்லுகிறது அருகிலேயே சுடுகாடும் உள்ளதால் அரசின் முறையான அனுமதி வழங்கிட வேண்டாம் எனவும் அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர்,

இந்த கோரிக்கை மனுவை வட்டாட்சியர் கார்த்திகேயன்,மற்றும் உதவி ஆய்வாளர் மருது ஆகியோரிடம் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் வட்டத் தலைவர் எம் .ராமலிங்கம் தலைமையில் மனு கொடுத்தனர்,

மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story